Monday, September 25, 2006

மனமே ஓ மனமே

ஒரு பணக்காரர் தன் மகனுக்கு பணத்தின் அருமை குறித்து புரிய வைக்க அவனை ஏழைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று அனைத்தையும் கண்ட பிறகு தந்தை மகனிடம் கேட்கிறார்.

"நான் சென்று வந்த இடங்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இதில் இருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்?".

மகன் பதிலளிக்கிறான்

"நான் என்ன கற்றேன் என்றால் நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது. அவர்களிடம் நான்கு நாய்கள் இருக்கிறது."

"நம் தோட்டத்தின் நடுவில் ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கிறது. அவர்களிடத்தில் ஒரு மிகப் பெரிய ஏரி இருக்கிறது."

"நம்மிடம் விதவிதமான விளக்குகள் இருக்கிறது. அவர்களிடத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன."

"நம்மிடத்தில் நண்பர்களுடன் பேச, பழக ஒரு சிறிய இடம் இருக்கிறது அவர்களிடத்திலோ எல்லையில்லாத ஒரு இடம் இருக்கிறது."

"நம்மிடம் நம்மைப் பாதுகாக்க பெரிய சுவர்கள் இருக்கின்றன. அவர்களிடத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள்."

இந்த பதிலைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை திகைத்து நின்றார்.

இந்தச் சிறுவன் வறுமையிலும் அவர்களிடத்தில் இருக்கும் நிறைகளையும் பார்த்திருக்கிறான்.

நம்மில் பலர் இன்று பல நிறைகள் இருக்கும் இடத்திலும் குறைகளை மட்டுமே பார்க்கிறோம்.

pessimist ஆக பல நல்ல விஷயங்களை ஒதுக்கியே வருகிறோம்.

நமது பார்வையை மாற்றிக் கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது.

இந்தப் பதிவையும் கூட நீங்கள் வாழ்க்கைக்கு உதவாது என்று ஒதுக்கிப் போகலாம் இல்லையென்றால் இது பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாம்.

அது உங்களிமன் பார்வையை குறித்ததே.

1 comment:

மாசிலா said...

நல்ல பதிவு. சிந்திக்க வைத்தது.
வாழ்க்கையை எந்தெந்த கோணத்தில் இருந்து பார்ப்பது மட்டும் பெரிதல்ல. பின், புரிந்துகொள்வதற்கு எந்த விதமான எந்த விதமான மனக்கருத்துகளை உபயோகிக்கிறோம் என்பதும் முக்கியம்.
இவையெல்லாம், வளர்ப்பின், அனுபவத்தின் பலணே.