Thursday, December 07, 2006

காலை நேர ரோஜா படம்



ஒரு ரோஜாவின் முள் குத்தியதால் எல்லா ரோஜாக்களையும் வெறுப்பது முறையாகுமா?



உன்னை நினைத்த பொழுதெல்லாம் ஒரு ரோஜா மலருமெனில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஒரு ரோஜா மலரும்.



ரோஜா தக்காளியை விட வாசனை கொண்டிருக்கிறது என்பதற்காக அதனை சமையலுக்கு பயன்படுத்துவது முட்டாள்தனம்.

Monday, November 20, 2006

shawshank redemption காந்தியம்

விருதுகளுக்காக அறிவிக்கப் பட்டுள்ள படங்களில் பல சமயங்களில் நமக்கு தெரிந்து விடும் இந்தப் படத்திற்கு தான் விருது கிடைக்கப் போகிறது என்று. ஆனால் சில சமயங்களில் ஒரே சமயத்தில் இரண்டு மிகச் சிறப்பான படங்களில் வெளியாகி எந்தப் படத்திற்கு விருது கிடைத்தாலும் சரியே என்ற நிலை தோன்றுவதுண்டு.

1994 வருட ஆஸ்காரில் அது போன்றே ஒரு சூழ்நிலை நிலவியது. Forrest gump மற்றும் Shawshank redemption என்ற இரண்டு படத்தில் எதற்கு விருது கிடைத்தாலும் கரெக்ட் தான் என்ற சூழ்நிலை நிலவியது. கடைசியில் Forrst gump படத்திற்கு விருது கிடைத்தாலும் அந்த விருது எந்தப் படத்திற்கு வேண்டுமானாலும் கிடைத்திருக்கலாம்.

ஆண்டி ஒரு வங்கி வைஸ் பிரசிடெண்ட் தன்னுடைய மனைவியையும், அவளுடைய கள்ளக் காதலரையும் கொலை செய்ததாக Shawshank ஜெயிலுக்கு அனுப்பப் படுகிறார்.

அந்த ஜெயிலில் எல்லோருக்கும் சிகரெட் போன்றவற்றை எல்லோருக்கும் வெளியில் இருந்து வாங்கிக் கொடுப்பவர் தான் ரெட்.

படத்தில் ஒரு சிறப்பான காட்சி ஆண்டி முதல் நாள் ஜெயிலில் இரவைக் கழிக்கும் காட்சி. முதல் நாள் ஜெயிலுக்கு வரும் அனைவரும் ஆளுக்கு ஒருத்தர் மேல் பந்தயம் கட்டுகிறார்கள். ரெட் ஆண்டி மேல் பந்தயம் கட்டுகிறான். எதற்கு பந்தயம் என்பது அன்று இரவு தெரிய வருகிறது. ஜெயிலுக்கு முதல் முறை வருபவர் அனைவரும் முதல் நாள் இரவில் அழுதே ஆக வேண்டும். யார் முதலில் அழுவார்கள் என்பது தான் பந்தயம்.

இந்தக் காட்சி மிக நன்றாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலுக்கு முதல் முறை வந்தவகள் அழுவது ஜெயில் என்பது எவ்வளவு கொடுமையானது என்பதைக் காட்டும் காட்சியாக அமைகிறது.

ஆண்டி மீது பந்தயம் கட்டும் ரெட் தோற்கிறான். ஏனெனில் அவன் கடைசி வரை அழுகாமல் இருக்கிறான்.

ஆரம்பத்தில் அமைதியாகவும் தனித்தும் இருக்கும் ஆண்டியை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் பழக ஆரம்பிக்கிறான் ஆண்டி.

அதே சமயத்தில் ஜெயிலில் நடக்கும் வழுக்கட்டாயமான ஓரினச் சேர்க்கை வன்முறைக்கு ஆளாகுகிறான் ஆண்டி. அவர்களைத் தாக்கி அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஆண்டியின் முயற்சிகள் வீணாகுகின்றன.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிகின்றது. இதற்குள் ரெட்டிடம் நெருக்கமாகி விடுகிறான் ஆண்டி. அப்பொழுது ரெட்டின் மூலமாக சிறைக்கு வெளியில் சென்று வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு ஜெயில் வார்டன் தனக்கு 35,000 டாலர் ஒரு உறவினரின் உயிலில் இருந்து கிடைத்திருப்பதாகவும் அதற்கு வருமான வரி கட்டுவதன் மூலம் நிறைய இழக்க நேரிடும் என்றும் வருத்தப்படுகிறார்.

அப்பொழுது ஆண்டி தனக்கு தெரிந்த விவரங்களின் மூலம் வருமான வரி விலக்கு இருப்பதை சுட்டிக் காட்டுகிறான். அதுதான் அவனுடைய ஜெயில் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைகிறது.

இந்த யோசனைக்கு பிரதி பலனாக வெளியே வேலை செய்யும் எல்லோருக்கும் பியர் வரவழைத்து கொடுக்கிறான் ஆண்டி. சிறையில் பல காலம் வாடிக் கிடக்கும் ரெட் போன்றவர்களுக்கு அந்த சாதாரண பியரே எதோ சொர்க்கமே கிடைத்தது போன்று உணர்கிறார்கள்.

வார்டன் மேலும் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் இருந்தும் ஆண்டியைக் காப்பாற்றுகிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக சிறை அதிகாரிகள் அனைவருக்கும் வருமான வரி விலக்கு குறித்த யோசனைகளில் இருந்து எல்லா விதமான finanace யோசனைகளும் வழங்குகிறான் ஆண்டி. இதற்கு பிரதி பலனாக ஜெயிலில் இருக்கும் லைப்ரரியை விரிவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான் ஆண்டி.

ஆண்டிக்கு இதனால் சில பிரதிபலன்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு கற்களை செதுக்கும் ஒரு சுத்தியல் போன்ற ஒரு கருவி ஆண்டியிடம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விடப் படுகிறது.

இதற்கு நடுவில் ஜெயில் வாழ்க்கை எப்படி ஒரு மனிதனுக்கு பழகி விடுகிறது எப்படி பல காலம் ஜெயிலில் இருந்து வெளியாகும் ஒருவர் வெளியுலக வாழ்க்கையோடு ஒத்து வர முடியாமல் தூக்கி மாட்டிக் கொண்டு இறக்கிறார் என்று பல நெகிழ வைக்கும் காட்சிகள்.

ஆண்டி ஜெயிலுக்கு வந்து 19 வருடங்கள் ஆகி விடுகின்றது. இந்த சமயத்தில் ஜெயிலில் இருக்கும் சக கைதிகளை எல்லாம் ஒன்று திரட்டி பல வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துகிறான். தலைமை வார்டன் ஆண்டியின் திறமைகளைக் கண்டு கைதிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் கைதிகளை ரோடு போடுவது போன்ற பகுதிகளில் ஈடுபடுத்துகிறார்.

ஆரம்பத்தில் ஒழுங்காக செல்லும் இந்தப் பணிகளில் லஞ்சம் போன்றவை தலை தூக்க ஆரம்பிக்கின்றன. தலைமை வார்டனுக்கு இதன் மூலம் பல மில்லியன் டாலர் லஞ்சம் கிடைக்கிறது. ஆண்டி வார்டனுக்கு வரும் லஞ்சங்களை திறமையாக வெள்ளைப் பணமாக மாற்ற யோசனைகளை சொல்கிறான்.

இந்த சமயத்தில் தான் ஆண்டி உண்மையிலேயே குற்றவாளி கிடையாது என்ற உண்மை தெரிய வருகிறது. ஜெயிலுக்குப் புதிதாக வரும் கைதி ஒருவன் ஆண்டி குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கும் ஆதாரத்துடன் வருகிறான்.

ஆண்டி தலைமை வார்டனிடம் சொல்லி தன்னுடைய வழக்கை திரும்ப ஆரம்பிக்குமாறு கூறுகிறான். தலைமை வார்டன் ஆண்டி விடுதலையானால் தன்னுடைய லஞ்ச லாவண்யங்கள் வெளியே தெரிந்து விடும் என்பதை உணர்ந்து ஆதாரங்களை வைத்திருக்கும் கைதியைக் கொன்று விடுகிறார்.

அதன் பிறகு என்னவாகிறது என்பது திருப்புமுனையான ஒரு கிளைமாக்ஸ்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லப் பட வேண்டியது ஜெயில் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பது. மார்கன் பீரிமேன்(ரெட்), டிம் ராபின்ஸ்(ஆண்டி) ஆகியோரின் நடிப்பு.

இதில் நவீன அல்லது என் அளவிலான காந்தியத்தின் பிரதிநிதியாக அமைந்திருக்கிறது ஆண்டியின் பாத்திரம்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் அவனை துன்புறுத்தும் சமயம் ஆண்டி அஹிம்சை என்பதை கையாளவெல்லாம் இல்லை. அடித்து உதைத்தே அதில் இருந்து வெளியாக முயற்சிக்கிறான். அஹிம்சை என்பது எல்லா இடங்களிலும் உதவாது என்பது இன்றைய நிதர்சன உண்மை. அது போல தலைமை வார்டனுக்கு உதவுவது என்பதெல்லாம் மனிதன் என்பவன் சூழ்நிலைக் கைதி தான் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தே இருக்கிறது.

ஆண்டி சொல்வதாக "I was a decent man outside the jail. I came inside the jail to become a crook" அமைந்திருக்கும்.

மனிதன் என்பவனால் எப்பொழுதுமே அன்பு அஹிம்சை என்றிருக்க முடியாது எனபதை தெளிவாக விளக்கும் காட்சி இது.

ஆனால் இது போன்ற செயல்களால் அனைவருக்கும் உதவி செய்து சிறைக் கைதிகளிடம் நம்பிக்கையை உண்டாக்குவது போன்ற செயல்களால் ஆண்டி காந்தியவாதியாகிறான்.

தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவி செய்து, கை மீறி செல்லாத வரை அன்பையும் அகிம்சையையும் பின்பற்றுவதும் காந்தியம் தானே.

Thursday, October 26, 2006

விடுதலை

விடுதலை
பெற்றோம்
உரிமைக்கு

அடிமையாகவே
இருக்கிறோம்
உணர்வுகளுக்கு

புலியும் கயலும்
வில்லுமாய்
பிரிந்திருந்தோம்

தெள்ளமுதாம் தமிழ்
இணைக்க
மெய்யமுதாம் தண்ணீருக்காய்
கன்னடிகர்
எனப் பிரிகிறோம்

மண் தாய்தான்
எதிர்பார்ப்பின்றி கொடுத்தலிலும்
எந்தப் பிழையும் பொறுத்தலிலும்
இந்தியர் என்றிணைந்தால்
கற்பனைக் கோடுகளால்
நாலாப்புறமும் பிரிகிறோம்

எல்லாமே இறை
இணைகிறோம்
என்னிறை உன்னிறை
எனப் பிரிகிறோம்

பிரிவினைகளால்
மட்டுமே
இணைந்திருக்கிறோம்

உரிமைகளுக்கு கிடைத்த
விடுதலை கிடைக்குமா
பிரிவினை உணர்வுகளுக்கு?

Tuesday, October 10, 2006

மணிப்பூரும் தேச பக்தியும்

பல வருடங்களுக்கு முன் அல்ல இரண்டு வருடங்களுக்கு முன் மணிப்பூரில் சில விரும்பத்தகாத சில விஷயங்கள் நடந்தன. ஏனோ இன்றைய ஹிந்துவில் இதனைப் பற்றிய ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது. தேச பக்தி பற்றி உணர்வுபூர்வமாக இங்கு விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த கட்டுரையை இங்கு தருவது சரியானதாக இருக்கும் என்பதால் இங்கு கொடுக்கப் பட்டிருக்கிறது.

Sensational நியூஸ் அதன் பரபரப்புக்கு நாம் கொடுக்கும் கவனம் அதன் பின்னால் முற்றிலுமாக எப்படி மறந்து போகிறது.

Today are we having our priorites in wrong order?

ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கும் இந்த கட்டுரையின் சாராம்சம்

AFSPA(Armed Forces Special Power Act) அதாவது ராணுவத்திற்கு கொடுக்கப் பட்டுள்ள விஷேச அதிகார சட்டத்திற்கு எதிராக மணிப்பூரில் மனோரமா என்ற பெண் 2004லில் கற்பழிக்கப் பட்டதில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 2004ங்கில் மன்மோகன் சிங் இந்தச் சட்டத்தை ஒரு மேலும் மனித நேயம் மிக்க சட்டத்தால் மாற்றி அமைப்பதாக உறுதி கூறினார். PTI நிறுவனத்தின் செய்தி ஒன்று மன்மோகன் சிங் அழுது கொண்டிருந்த ஒரு தாயாரின் கைகளைப் பிடித்து "நாங்கள் இதற்காக ஏதேனும் செய்வோம்" என்று உறுதி கூறியதாக தெரிவிக்கிறது.

மன்மோகன் சிங் உறுதி அளித்த படியே ஜீவன் ரெட்டியின் தலைமையில் ஒரு குழு அமைத்தார். மத்திய காபினேட்டில் இருந்த சிரிவஸ்தவா, பத்திரிக்கையாளர் சஞ்ஜோய் ஹஜாரிகா, கல்வியாளர் நகாடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

ஜீன் 6 2005ல் முழு மனதாக இந்தக் குழு தன்னுடைய கண்டுபிடிப்புகளை சமர்பித்தது. ஆனால் அதன் பின்னால் இதன் மேல் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படவில்லை.

இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இந்தக் குழு AFSPAவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வதாக சொல்லப் படுகிறது.

ஷார்மிளா என்ற நபர் கடந்த ஆறு வருடங்களாக இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உண்ணா விரதப் போராட்டம் மேற் கொண்டு வருகிறார். இவர் மற்ற உண்ணா விரதப் போராட்டங்களைப் போல் அல்லாமல் தன் வாயில் தண்ணீர் கூடப் படக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி தன் பற்களைக் கூட காட்டன் துணியால் துடைத்து வருபவர்.

இவர் உயிர் வாழ்வது கட்டாயமாக கொடுக்கப் பட்டு வரும் நாசல் டிரிப்ஸ் மூலமாகவே.

இவரின் மேல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஒரு ஒரு வருடமாக தண்டணை கொடுக்கப் பட்டு வருகிறது.

இந்த முறை தண்டணைக் காலம் முடிந்த உடன் மீண்டும் தண்டனை கொடுக்கும் முன் டெல்லி வந்து தன்னுடைய உண்ணாவிரத்தை தொடர்கிறார்.

இவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுமா?




DETERMINED STRUGGLE: Manipur Chief Minister Ibobi Singh with Irom Sharmila, who has been on a hunger strike for the last six years seeking repeal of the AFSPA, in New Delhi on October 6

Does anybody care about Manipur?

The question of repeal of the Armed Forces (Special Powers) Act needs to be debated publicly in the light of the Justice B.P. Jeevan Reddy Committee's report.The question of repeal of the Armed Forces (Special Powers) Act needs to be debated publicly in the light of the Justice B.P. Jeevan Reddy Committee's report.

Siddharth Varadarajan

Siddharth Varadarajan
THERE IS a statement, perhaps apocryphal, that Mahatma Gandhi supposedly made to the effect that satyagraha worked against the British but might not have against a more ruthless opponent like the Germans. Considering the indifference with which Official India has greeted the unprecedented civic protest in Manipur against the Armed Forces (Special Powers) Act these past few years, the question arises whether we have become the kind of opponent Gandhiji spoke about. That we have so inoculated ourselves against the weapon of peaceful protest that nothing other than guns and bombs seems to rouse us from our torpor.
Two years ago, the abduction and killing of Manorama triggered massive protests by the people of Manipur against the AFSPA. A group of brave Manipuri women shook the conscience of the whole of India by baring themselves in front of the guns and bayonets of the Army. Thanks to the power of democratic protest, Prime Minister Manmohan Singh told a delegation of the Apunba Lup - the umbrella organisation spearheading the campaign - in New Delhi in November 2004 that he would consider replacing the AFSPA with "a more humane law that will address both the concerns of national security and the rights of citizens."
Later that month, Dr. Singh went to Imphal and met some of the women who had staged that dramatic protest against the AFSPA outside Kangla Fort. According to a report filed soon after by the Press Trust of India, the Prime Minister "held the hand of a weeping mother and said, 'We will do something'."
True to his word, the Prime Minister appointed a high-level committee headed by Justice B.P. Jeevan Reddy with the mandate of "review[ing] the provisions of AFSPA and advis[ing] the Government of India whether (a) to amend the provisions of the Act to bring them in consonance with the obligations of the Government towards protection of human rights; or (b) to replace the Act by a more humane Act." The members of the committee were carefully selected so that the concerns of the Union Government and the security forces would not be unrepresented. There was one retired General, V.R. Raghavan, who, prior to joining the committee, had advocated in newspaper columns the case for the continuation of AFSPA in Manipur. There was also a senior retired official from the Union Home Ministry, P.P. Srivastava. From civil society were the academician S.B. Nakade and the journalist Sanjoy Hazarika.
Though the composition of the committee led some impetuous critics to suggest the outcome of its exertions would be to advocate the retention of the law, the Prime Minister's nominees took their job seriously and discharged their mandate fairly and objectively. Extensive public hearings were conducted in all Northeastern States and in Delhi. The views of the armed forces and various government departments were also solicited.
The Jeevan Reddy panel submitted its recommendations in under seven months. On June 6, 2005, its five members unanimously signed off on the report. Shortly thereafter, a copy was handed over to Union Home Minister Shivraj Patil. Since then, however, the process has inexplicably ground to a halt. Nearly a year and a half has elapsed with the Government refusing to say anything definitive about its recommendations. This is presumably not what the Prime Minister meant when he told that weeping mother, "We will do something."
Though the report was never made public because of the opposition of the Army and the Ministry of Defence, a misleading summary of its findings was leaked to the press according to which the Jeevan Reddy Committee was seeking little more than a change of nomenclature: Scrap the AFSPA, but retrofit the Unlawful Activities (Prevention) Act with all its controversial provisions. One can only surmise that the intention of this half-truth was to so discredit the report that no one would bother agitating for its release.
This neat equation, however, came unstuck last week with the unexpected arrival in Delhi of Irom Sharmila. Ms. Sharmila has been on a hunger strike for the past six years demanding repeal of the AFSPA. Unlike other hunger strikers, she has not allowed even a drop of water to cross her lips all this while. She cleans her teeth with cotton and not water and has been kept alive through force-feeding via a nasal drip five times a day. Last week, her fifth sequential one-year sentence for "attempted suicide" expired and before she could be rearrested she boarded a plane to the national capital. After a visit to Rajghat, she settled down at Jantar Mantar demanding that the Jeevan Reddy Committee report be released and the AFSPA be repealed.
Life and death issue
As the extracts published in this newspaper on Saturday confirm, the report clearly recommends scrapping the Armed Forces Act. At the same time, acknowledging both the reality of insurgency and the fact that the armed forces cannot be deployed inside the country without a proper legal framework, the Committee has pointed out that the Unlawful Activities (Prevention) Act already provides the kind of protection against legal suits the armed forces are demanding. What is needed are amendments to protect civilians against the abuse of power. Thus, it has sought the insertion of important safeguards to ensure there is no violation of human rights.
In fairness to the Committee and to all those who have been exercised about the Armed Forces Act, the report deserves a careful and critical reading. Its recommendations need not be considered the final word. In an open society, they can and should be debated and ways found to improve the core suggestions. But for this to happen, it is essential that the report be put in the public domain. The AFSPA has become a question of life and death for millions of people in India today. And they have a right to discuss it.
Now that the report has been unofficially released by The Hindu, its contents can be studied and evaluated by civil society. But what is mystifying is the inordinate time the Manmohan Singh Government has taken in forming an official opinion on its recommendations. The Prime Minister is entitled to reject or modify the recommendations of the Reddy committee if he wants. In turn, the people of Manipur, the Northeast, and the rest of India are entitled to draw whatever conclusions they wish about the sincerity of the promises he made in November 2004. If the Government wants to retain the AFSPA despite the measured counsel of Justice Jeevan Reddy and his colleagues, let it do so. The only requirement is that Dr. Singh and his officials should have the courage openly to defend their decision rather than dodging responsibility by claiming the report is "still being studied."
In the film Lage Raho Munnabhai, which the Prime Minister himself has confessed to admiring, citizens are urged to send flowers to someone who is suffering from a social affliction or ailment. For Gandhiji, indecisiveness was a disease as deadly as indifference. Fifteen months is a long time to study a report prepared by one's own hand-picked experts. Is Dr. Singh suffering from indecisiveness? Should the people of India start sending flowers to 7 Race Course Road?

Monday, October 09, 2006

காந்தியம் இன்று

காந்தீய சிந்தனைகள் இன்று இறந்து விட்டதா? அவை இக்காலத்திற்கு ஒவ்வாது என்று ஒதுக்கி விடப் பட்டுள்ளதா? கிட்டத்தட்ட கோமா நிலையை அடைந்து விட்டாலும் தட்டி தடுமாறினாலும் இன்னும் காந்திய சிந்தனைகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

மகிழ்ச்சி அளித்த முதல் செய்தி

The Hindu CITY1, 09-Oct-2006, Page : 005

Celebrating 100 years of Satyagraha
Centenary is about 'continuing relevance of Gandhi's ideas'

Staff Reporter

Staff Reporter
CHENNAI: More than 500 children sang of victory at an event celebrating Satyagraha here on Sunday.
They sang along with Anuradha Sriram, playback singer, who adapted the tune of 'We Shall Overcome' to translated Tamil lyrics that began 'Vettri Peruvom'.
Activities galore
They performed folk dances, watched a film on Gandhi and learnt much about his life through an exhibition of rare pictures of Sathyagraha, a painting competition and other activities.
G. Thilagavathi, Additional Director General of Police, told the children that Gandhi's life in itself was a message that they could model their lives on.
Children from Thakkar Bapa Primary School, Aseema Trust, Akila Bharatiya Seva Dal, Bharathi Night School, L.N. Sharma School performed items ranging from kolattam, a folk dance form, to a Tibetan folk dance in the morning.
The event marks the centenary of the first Satyagraha or non-violent protest that fell on September 11, 2006, and Gandhi Jayanthi. "The Satyagraha centenary is about the relevance and applicability of Satyagraha," said Annamalai, director, Gandhi Study Centre, which has been holding programmes on the theme since September 11 last year.
"We seek to achieve the twin objectives on creating a positive attitude towards Gandhi and propagating the relevance on non violence."
"Special programme"
G.R.K. Reddy, managing director, Marg Constructions, which organised the event along with the Centre, said the programme was special since it brought so many children together.
Children could choose between puppetry or magic shows, learning dance or watching a slide show.
Schools, colleges or institutions interested in screening the documentary on Gandhi can contact Annamalai of the Gandhi Study Centre at 94441 83198.


மகிழ்ச்சி அளித்த முதல் இரண்டாம் செய்தி

The Hindu CITY1, 10-Oct-2006, Page : 002

Munna Bhai's Gandhigiri refuses to be just a fad
Rajasthan Cosmo Club Platinum uses it to explain their search for identity in a corrupt world

Staff Reporter

Staff Reporter
CHENNAI: At the celebration of 'Yuva - the spirit of youth' on Sunday, the youth wing of the Rajasthan Cosmo Club used the Sanjay Dutt-starrer 'Munna Bhai' series as a prop to explain their search for identity in a world characterised by "brashtachar" (corruption).
Hit with parents
The programme was a hit with the audience, which contained a large number of middle-aged parents, who saw themselves portrayed as sedate, wise men and women against spirited, and, sometimes, wayward youths. Children go to school with prayers on their lips but grow up in a world of harsh realities. Youngsters become dishonest, lose sight of their goal, fall by the wayside and use deceit to escape skirmishes when found out.
But, as in 'Lage Raho Munna Bhai', they find a mentor they had forgotten in their hurry to grow up. They reform themselves and try to reform the world around them, sometimes rudely and at others politely.
More than 100 youngsters participated in the programme, which included a fashion show that traced Bollywood fashion from the 1960s to 2006. The performers gave the audience a peek into the fashion statement and mannerisms of the actors they aped.
Members of Rajasthan Cosmo Club Platinum, youth wing of the RCC, were assisted by Sanjay Asrani (choreography), John Britto, Kurinji Nathan and Gopinathan (mime and street theatre). A skit on the social values of today's youth was produced in-house. Hindi film songs formed the backdrop for the dance sequences.

Saturday, October 07, 2006

அப்சல்

அப்சலை என்ன செய்யலாம் என்று எல்லோரும் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அப்சல் ஏன் செய்தான் என்ற கேள்வி தொலைந்து போகிறதோ?

Every action has an equal and opposite reaction.

அப்சலின் வினைக்கு எதிர்வினை பற்றி யோசிக்கும் சமயம் அப்சலின் வினை எதிர்வினையாக இருக்கலாம். அந்த மூல வினை தான் அனைத்திற்கும் காரணம் என்பதை மறந்து விடுகிறோமோ?

Are we are getting lost in the moment rather than searching for the cause?

காரணிகள் முக்கியமா? காரணங்கள் முக்கியமா?

காரணங்களை விட்டு விட்டு காரணிகளை துரத்திக் கொண்டிருக்கிறோம்?

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்யான பொருள் காண்பதே அறிவு?

Thursday, September 28, 2006

வாழ்க்கை

உனக்கு இல்லாத ஒன்று உனக்கு வேண்டுமென்றால் நீ இது வரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும்.

Free Image Hosting at www.ImageShack.us

வாழ்க்கை செல்லும் வழிகளில் எல்லாம் செல்லாதே. நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.

நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.

Monday, September 25, 2006

மனமே ஓ மனமே

ஒரு பணக்காரர் தன் மகனுக்கு பணத்தின் அருமை குறித்து புரிய வைக்க அவனை ஏழைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று அனைத்தையும் கண்ட பிறகு தந்தை மகனிடம் கேட்கிறார்.

"நான் சென்று வந்த இடங்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இதில் இருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்?".

மகன் பதிலளிக்கிறான்

"நான் என்ன கற்றேன் என்றால் நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது. அவர்களிடம் நான்கு நாய்கள் இருக்கிறது."

"நம் தோட்டத்தின் நடுவில் ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கிறது. அவர்களிடத்தில் ஒரு மிகப் பெரிய ஏரி இருக்கிறது."

"நம்மிடம் விதவிதமான விளக்குகள் இருக்கிறது. அவர்களிடத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன."

"நம்மிடத்தில் நண்பர்களுடன் பேச, பழக ஒரு சிறிய இடம் இருக்கிறது அவர்களிடத்திலோ எல்லையில்லாத ஒரு இடம் இருக்கிறது."

"நம்மிடம் நம்மைப் பாதுகாக்க பெரிய சுவர்கள் இருக்கின்றன. அவர்களிடத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள்."

இந்த பதிலைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை திகைத்து நின்றார்.

இந்தச் சிறுவன் வறுமையிலும் அவர்களிடத்தில் இருக்கும் நிறைகளையும் பார்த்திருக்கிறான்.

நம்மில் பலர் இன்று பல நிறைகள் இருக்கும் இடத்திலும் குறைகளை மட்டுமே பார்க்கிறோம்.

pessimist ஆக பல நல்ல விஷயங்களை ஒதுக்கியே வருகிறோம்.

நமது பார்வையை மாற்றிக் கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது.

இந்தப் பதிவையும் கூட நீங்கள் வாழ்க்கைக்கு உதவாது என்று ஒதுக்கிப் போகலாம் இல்லையென்றால் இது பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாம்.

அது உங்களிமன் பார்வையை குறித்ததே.

Monday, September 18, 2006

விலங்குகளின் பாடம் மனிதனுக்கு

Image Hosted by ImageShack.us

ஆறாம் அறிவு இல்லாதது நாய். நாய் அறிந்தது எல்லாம் survival instinct மட்டுமே. ஆனால் இங்கு அதனுடைய survivalக்கு ஆபத்து விளைவிக்க கூடிய விலங்கிடம் கூட அன்பு செலுத்துகிறது.

மாற்று இனத்திடம் கூட அன்பு செலுத்தும் இந்த நாயிடம் இருந்து ஆறாம் அறிவு கொண்ட மனிதன் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. மாற்று மனிதனிடம் இருந்து உன்னை மதத்தால், ஜாதியால், நிறத்தால், இனத்தால், மொழியால் என்று எந்த வகையிலும் வேற்றுமை படுத்திக் கொள்ளாதே என்பது தான் அப்பாடம்.

Image Hosted by ImageShack.us

சுனாமியால் இலங்கையில் பாதிக்கப் பட்ட ஆமையும் நீர் யானையும் நண்பர்களாகி விட்டதாம். இரண்டும் ஒன்றை ஒன்று பிரிவதில்லையாம். அன்பு என்பது எல்லை இல்லாதது என்பதற்கு இதனை விட ஒரு சாட்சியுண்டா?

மனிதர்களில் பலர் சில சமயம் மிருகமாகி விடுகிறார்கள். மிருகங்களில் சில மனிதத் தன்மை பெற்று விடுகின்றன.

அன்பு செய்யுங்கள் உங்கள் மனதின் பிரிவினைகளை நீக்கி.

Friday, September 15, 2006

அன்பு

அன்பு இந்த வார்த்தையில் தான் எத்தனை மகத்துவமானது. அன்பில்லாமல் சமூகம் என்ற இந்தக் கட்டமைப்பு எப்படி உருவாகி இருக்கும்? தாயின் அன்பு முதல் முகம் தெரியாத பலரின் அன்பு வரை இந்த உலகில் அன்பை விட அருமையான ஒரு விஷயம் இருக்கிறதா?

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

வாடிய பயிறைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற மனநிலை கொள்ள இயலாவிட்டாலும் அது போன்ற மனநிலை கொள்வதே சரி என்றாவது எல்லோரும் உணர வேண்டும்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

நமக்கு தீங்கு செய்பவரிடத்திலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு இயலாவிட்டாலும் நமக்கு தீங்கு செய்யாத எல்லோரிடத்திலுமாவது அன்பு செய்ய வேண்டும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

அன்பையே மதம் என்று கொண்ட மனிதன் எல்லா மதங்களையும் சார்ந்தவனாகி விடுவான். எல்லா மதங்களும் அன்பையே போதிப்பதால் அன்பை மதம் என்று கொள்வது நீங்கள் எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த மதத்தை சார்ந்தவராகி விடுவீர்கள்.

அஹிம்சை

அஹிம்சை என்பது பிற உயிர்களைக் கொல்லாமை மட்டும் அல்ல. அது அற வழிப் போராட்டம்.

நான் மஹாத்மா அல்ல சாதாரண மனிதன் ஆகவே எனக்கு இந்த வழிகள்தான் தெரியும் என்று கூறி தவறுகள் புரிவது சரியல்ல. தெரிந்தே தவறுகள் செய்வது அதற்கு தகுந்த நியாயங்கள் சொல்வது எந்த விதத்திலும் சரி அல்ல.

அஹிம்சை மூலம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் உடனடித் தீர்வு ஏற்படாது. ஒரு பிரச்சனைக்கு அஹிம்சை வழியில் சென்று தீர்வு காண பல காலம் பிடிக்கலாம் ஆனால் அப்படி காணப் படும் தீர்வே சரியானதாக இருக்கும்.

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் திரும்ப அதனை விட மோசமாக திட்டுவது எப்படி ஒரு பிரச்சனையைத் தீர்க்கும்? பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமெனில் அவர் திட்டுவது தவறு என்று உணரச் செய்ய வேண்டும். இதற்கு காலம் பல பிடிக்கலாம் ஆனால் இதுவே இந்தப் பிரச்சனை தீர வழி வகுக்கும். மாறி மாறி திட்டிக் கொள்வதால் என்ன பயன்?

இது போலவே பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

அவர் ஹிம்சை புரிந்தார் நாமும் ஹிம்சை புரிவோம் என்று எடுத்துக் கொண்டால் அவர் ஹிம்சை புரிந்ததற்கும் அவரால் விளக்கம் கொடுக்க முடியும் என்றால் என்றுதான் ஓயும் ஹிம்சைகள்?

இதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது வலையில் கண்ணில் அகப்பட்டது நன்றி மரத்தடி

சொல்லாலும் செயலாலும் மற்றவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது. மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துவது, மற்ற உயிர்களை மதித்தல், செடி கொடியாகட்டும், சக உயிர்களாகட்டும் எதற்கும் மதிப்பளிக்கவேண்டும்.

தன்னுயிர் போல பிற உயிர்களையும் கருதும் நோக்கு அது தான் அஹிம்சை.
உடலாலும் மனதாலும் பிறருக்கு தீங்கு வராமல் காப்பதும் அஹிம்சை தான். ஒருவன் நான் யாரையும் அடித்ததில்லை துன்புறுத்தியதில்லை எனலாம். ஆனால் அவன் பேச்சைக் கேட்டு சிலர் மனம் துன்புறுவார்களேயானால் அவன் அஹிம்சையில் இருந்து தவறியவன் ஆகிறான்.

இதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது வலையில் கண்ணில் அகப்பட்டது நன்றி பானுக்குமார்

அஹிம்சை என்னும் சொல் , பல கருத்துக்களை உள்ளடக்கியுள்ள வார்த்தை. அதற்கு ஒரே வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியாது. அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை முதலிய கருத்துக்களைக் கொண்டது அஹிம்சை என்னும் சொல். இந்தக் கருத்துக்களைத் திருக்குறள் சில அதிகாரங்களினால் விளக்குகிறது.

இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலிய அதிகாரங்களின் கருத்துக்கள் சேர்ந்ததுதான் அஹிம்சை என்பதன் உண்மைப் பொருள்.

Wednesday, September 06, 2006

அறிமுகம்

நான் வலைப் பதிவுகளில் சில காலங்களாக உலவி வரும் ஒரு பதிவாளன். காந்தி போன்றவர்களால் நம் தேசம் நமக்கு 1947ம் ஆண்டு மீண்டும் கிடைத்தது. அன்னியர்களிடம் இருந்து தேசம் நமக்கு கிடைத்து விட்டது ஆனால் நாம்தான் இன்று தேசத்திற்கு அன்னியர்களாகி விட்டோம்.

அன்பு, அறன் என்ற இந்திய நாட்டின் இறையான்மை இன்று நமக்கு அன்னியமாகி விட்டது. அஹிம்சையில் உள்ள நம்பிக்கைகள் இன்று சுத்தமாக குறைந்து கொண்டே வருகிறது. அனைவருமே ஹிம்சை தான் அனைத்திற்கும் தீர்வு என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த என் முயற்சி அஹிம்சை ஹிம்சையை விட பல மடங்கு உறுதியானது என்ற என் நம்பிக்கைக்கு எனக்கு நானே வைத்துக் கொள்ளும் சத்திய சோதனை.